பால் குடிப்பது நல்லதா ? அல்லது கெட்டதா ?


பெரிய வியாபார நிறுவனங்கள் பணத்தை இறைத்து உண்மையை பொய்யாக்குவதும், பொய்யை உண்மையாக்குவதும் இன்று நிகழ்வதை நாம் பார்த்துக்கொண்டு தான் இருக்கிறோம்.

Milk

மனிதனுக்குத் தாய்ப்பால் மட்டுமே போதுமானது. அதன் பிறகு, பாலை ஜீரணிக்கும் என்சைம்கள் நம் உடலில் சுரப்பதில்லை. பால் நம்முடைய உணவே அல்ல. அது பசு தன்னுடைய கன்றுக்காக சுரப்பது. நாம் அதை நம் சுயநலத்திற்காக திருடிக்கொண்டிருக்கிறோம்.

பாலில் கால்சியம், புரதம் போன்ற சத்துக்கள் இருப்பதாக, ஆங்கில (அலோபதி) மருத்துவர்கள் சொல்லுவார்கள். ஆனால், பசுவிற்கு அந்த சத்துக்கள் பச்சை புற்களைச் சாப்பிடுவதில் தானே கிடைக்கிறது. அதுபோல, பல்வேறு கீரைகளை உண்டு, நாமும் பெற முடியும்.

பால் பொருட்களை நிறுத்தினால், சளி, இருமல், ஈஸ்னோபீலியா, மூச்சிரைத்தல், ஆஸ்துமா, போன்ற நோய்கள் குறைவதைக் கண்கூடாக காணலாம்.

மேலும் இன்று பசுவின் பாலிலும் இரசாயனம் கலந்து விற்க்கபடுகிறது. பால் தற்போது பால் பண்ணைகளில், அதிகப் பால் உற்பத்திக்காக, பலவித மருந்துகள் மற்றும் ஹார்மோன் ஊசிகள் போடப்பட்டு.. பலவிதக் கலப்படங்களுடனேயே (யூரியா உட்பட) பாக்கெட்டில் அடைக்கப்பட்டு நமக்குக் கிடைக்கிறது. பால் என்ற பெயரில்,நாம் மெல்லக் கொல்லும் விஷத்தையே அருந்திக் கொண்டு இருக்கிறோம் என்பதை உணர வேண்டும்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *