கடவுள் இருக்கிறாரா ?


ஒரு கஸ்டமர் முடி வெட்டிக்கவும் தன்னோட மீசையை ட்ரிம் பண்ணிக்கவும் ஒரு சலூன் கடைக்குப் போனாரு. அங்க இருந்த முடி திருத்துபவர் அவரோட பேசிகிட்டே தன்னோட வேலையையும் பார்க்கறாரு. அப்ப அவங்க பேச்சு கடவுள் இருக்கிறாரா அப்படிங்கற சப்ஜெக்ட்குள்ள போச்சு.

அப்ப அந்த முடி திருத்துபவர், “கடவுள் இருக்கிறார்னு சொல்றத நான் நம்பவில்லை..”

“ஏன் அப்படிச் சொல்கிறீர்கள்?”

“ஓகே…நீங்க இப்ப நம்ம தெருவுல நடந்து பாருங்க…….அப்ப உங்களுக்கே தெரியும் கடவுள் இல்லைனு.

கடவுள் இருந்திருந்தா ஏன் இத்தனை அனாதைக் குழந்தைகள்? ஏன் இத்தனை நோயாளிகள்? கடவுள் இருந்திருந்தால் நோயும் இருக்காது வலியும் இருக்காது. கடவுள் அன்பு செலுத்துவதாக இருந்தால் எதற்காக இதனை அனுமதிக்க வேண்டும்?”

இதற்கு பதில் சொன்னால் அது பெரிய வாக்குவாதத்திற்கு வழி வகுக்கும் என்று அந்த கஸ்டமர் பதில் எதுவும் சொல்லாமல் கடையை விட்டு வெளியேறுகிறார்.

அவர் கடையை விட்டு வெளியே வந்த சமயத்தில் மிக நீளமான தாடியுடனும் நீளமான, அழுக்கான தலை முடியுடனும் ஒருவன் வருவதைப் பார்த்துவிட்டு மீண்டும் கடைக்குள் சென்று அந்த முடி திருத்துபவரிடம்,

“உங்களுக்கு ஒன்று தெரியுமா? முடி திருத்துபவர் கூட இந்த உலகத்தில் இல்லை”

அதிர்ச்சியான முடி திருத்துபவர், “அது எப்படி சொல்வீர்கள்? நான் இங்குதான் உள்ளேன். உங்களுக்காக உங்களை அழகுபடுத்துவதற்காக நான் இருக்கிறேன்.”

“இல்லை………..அப்படி முடி திருத்துபவர் என்பவர் இருந்திருந்தால் இப்படி நீளமான முடியுடனும் ட்ரிம் செய்யப்படாத தாடியுடனும் இவனைப் போல ஒருவன் இந்த ஊரில் இருக்க மாட்டான்.”

“அஹ் முடி திருத்துபவர் நாங்கள் இருக்கிறோம். ஆனால் எங்களிடம் வராமல் ஒருவன் இருந்தால் இப்படித்தான் இருப்பான். அதற்கு நாங்கள் எப்படி பொறுப்பாக முடியும்?”

“மிகச் சரியாகச் சொன்னீர்கள். அதே போலத்தான் கடவுள் என்பவர் இருக்கிறார். மக்கள் அவனைச் சரணடையாமல் கடவுள் இல்லை என்று சொன்னால் என்ன அர்த்தம்?”

இந்தக் கேள்வியில் முடி திருத்துபவர் வாயடைத்துப் போனார்.

எமது வீடியோக்களை பார்வையிடுவதற்கு YouTube channel-க்கு subscribe பண்ணுங்க. https://www.youtube.com/channel/UC-rokQSwATLngOe371i9JVA/

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *