எளிதில் நலம் தரும் இனிமா. இன்னலை போக்கி இன்பம் கொடுக்கும் இனிமா


★மனிதன் நிம்மதி இல்லாமல் இருப்பதற்கு நோய் காரணமாக அமைகிறது. மனிதனுக்கு வரும் முக்கால் பங்கு நோய்களில் மல கழிவுகளை சரியாக வெளியேற்றாமல் அடக்கி வைப்பதே காரணம். மலச்சிக்கல் உள்ள உடலில் கிருமிகள் உற்பத்தியாகும். எனவே இரத்தத்தில் நச்சுக்கள் ஏற்ப்படும். உடல் நோய் வாய்ப்படும்.

kudal

“உடம்பார் அழியில் உயிரார் அழிவர்
திடம்பட மெய்ஞானம் சேரவும் மாட்டார்
உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே
உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே”.
திருமந்திரம்-4:

★நெற்றியில் வெள்ளை மலமும்( சளி ) அடிவயிற்றில் மஞ்சள் மலமும் சேரகூடாது என்று வள்ளலார் கூறியுள்ளார். மனிதனுக்கு பல நோய்கள் வருவதற்கு காரணம் கழிவுகளை வெளியேற்றாமல் தேக்கி வைப்பதே காரணம்.

இதை தவிர்க்க உருவாக்கப்பட்டது தான் இனிமா கேன் என்னும் கருவி. கழிவுகளை நீக்கிவிட்டால் மனிதனுக்கு நோய்யில் இருந்து விடுபடலாம். குடலில் ஏற்படும் அனைத்து நோயிலிருந்தும் முழுமையாக விடுபடலாம்.

enema-can

இனிமா எடுக்கும் முறை:

★தலை உயரத்தில் (அதிகபட்ச உயரத்தில் ) எனிமா கேனை மாட்டி கொள்ளவும்.

★நாசிலின் மீது எண்ணெய் தடவவும். ஆசன வாயில் மீதும் சிறிது எண்ணெய் தடவவும். இவ்வாறு எண்ணெய் தடவுவதன் முலம் நாசிலை இலகுவாக செருகலாம்.

★சுத்தமான குடிநீரைத் தேவையான அளவு கேனில் ஊற்றவும் .

★குனிந்து நின்று கொண்டு ஆசன வாயில் நாசிலை செருகவும். உள்ளே சுமார் 2 அங்குலம் ஆழம் இருக்கும்படியாக இழுத்து வைக்கவும்.

enema

★அப்போது நீர் உள்ளே செல்லும். செல்லாவிட்டால் நாசிலை வெவ்வேறு கோணங்களில் சாய்த்து பிடித்தால் நீர் உட் செல்லும். மூன்று நிமிடங்களில் நீர் சென்றுவிடும் .

★தேவையான நீர் உட் சென்றவுடன் நாசிலை எடுத்து விடலாம். நீரை உடனே கழித்து விட கூடாது. இதனால் பயன் குறைவு.

★சில நிமிடங்கள் நீரை உள்ளே வைத்திருக்க வேண்டும். பத்து நிமிடங்கள் வரை வைத்திருக்கலாம். முடியாவிட்டால் கழித்து விடலாம்.

★எனிமா எடுத்து கொண்டவுடன் குத்துக்கால் வைத்து படுத்துக் கொண்டால் தான் நீரை வைத்திருக்க எளிதாய் இருக்கும்.

enema 2

★நின்று கொண்டும் உட்கார்ந்து கொண்டும் இருந்தால் சிரமம். தேவையான நேரம் வைத்திருந்து விட்டு நீரை கழித்து விடலாம்.
இந்த இனிமா கேன் அனைத்து சித்த மருத்துவ நிலையங்களிலும் கிடைக்கும்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *