அசைவப்புரதம் நமக்கு தேவையா?


விலங்குகளிடமிருந்து கிடைக்கக்கூடிய புரதத்திற்கும், செடிகளிடமிருந்து கிடைக்ககூடிய புரததிற்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன. அசைவப் புரதம் (முட்டை, கறி, கோழி, பால், பால் பொருட்கள்) மனிதனுக்கு ஏற்றவை அல்ல.

meat-eating-men

 

மனிதனின் ஜீரண மண்டலம் அசைவப் புரதத்தை ஜீரணிக்கும் வகையில் அமைக்கப்படவில்லை. அது மாமிச பட்சிணிகள் (கார்னிவோரஸ்) மற்றும் ஓம்னிவோரஸ் (சைவம் மற்றும் அசைவம் இரண்டும் உண்பவை) ஆகியவற்றிலிருந்து வேறுபடுகிறது.

அவன் ஒரு பழந்தின்னி வகையை சேர்ந்தவன். பழங்களும், கொட்டைபருப்புகளும் தான் அவனுடைய உணவு. அசைவப் புரதம் உடலில் மட்டுமல்லாமல் மனதிலும் நோயை உண்டு பண்ணுகிறது. அசைவ உணவு நிறைய உண்போர் மிகுந்த கோபம் கொள்பர். அசைவ உணவு மூளையின் சக்தியையும் துடிப்பையும் குறைத்து விடும்.

ஒரு மனிதன் அசைவ உணவையும் பால் பொருட்களையும் தவிர்த்தால் 50% நோயுலிருந்து விடுதலை அடைந்து விடுவான். மாமிச பட்சிணிகள் கூட பச்சைக் கறியையே சாப்பிடுகிறது.

மனிதன் ஒருவன் தான் பிணங்களை வறுத்து, பொரித்து சாப்பிட்டு தன்னை நாகரிகம் அடைந்தவன் என்று வேறு கூறிக் கொள்கிறான்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *